கருப்பை என்பது முற்றிலும் தசைகளால் ஆன ஒரு பை போன்ற அமைப்பு. இடுப்புப் பகுதியில் உள்ள தசைகள் மற்றும் தசைநார்கள் கருப்பையை அதனிடத்தில் நிறுத்த துணை புரிகின்றன.
அத்தைய தசைகள் மற்றும் தசைநார்கள் வலுவிழப்பதாலும், தளர்வடைவதாலும் கருப்பையானது தனது நிலையிலிருந்து கீழிறங்குகிறது.
கருப்பை இறக்கம் இரண்டு நிலைகளாக அறியப்படுகிறது.
1. பகுதி அளவில் ஏற்படும் இறக்கம் (Partial Prolapsed)
2. முழுவதுமான கருப்பை இறக்கம் (Complete Prolapsed).
முழுவதும் இறக்கத்துக்கு உண்டான கருப்பையானது தளர்ந்து தொங்கிய நிலையில் பிறப்புறுப்பு வரை இறங்கிக் காணப்படும்.
கருப்பை இறக்கம் அறிகுறிகள்
பிறப்புறுப்பில் இரத்தம் கசிதல்
மலச்சிக்கல்
சிறுநீரகப்பையில் தொடர் நோய்த்தொற்று
அமருவதில் சிரமம்
உடலுறவில் திருப்தியின்மை மற்றும் வலி
பிறப்புறுப்பு தடித்துப் போதல்
முதுகு மற்றும் இடுப்பு வலி
இடுப்புப்பகுதி பாரமாக இருப்பது போன்ற உணர்வு
சிறுநீரைக் கட்டுப்படுத்த முடியாத நிலை
கருப்பை இறக்கத்திற்கான காரணங்கள்
பெண்களுக்கு உடலில் சுரக்கும் பாலின ஹார்மோனான ஈஸ்ட்ரோஜென் இடுப்பு தசைப்பகுதிகள் மற்றும் கருப்பைத் தசைபகுதிகள் வலுவாக அமைய உதவுகிறது.
ஈஸ்ரோஜென் சுரப்பில் குறைபாடுகள், அடிக்கடியான மகப்பேறு, கர்ப்ப காலங்களில் இடுப்பு தசைப்பகுதிகள், அடிவயிற்று தசைகள் வலுவிழத்தல் போன்றவை கருப்பை இறக்கத்திற்கான காரணங்கள் ஆகும்.
மிகவலுவான பணிகளுக்கு இடுப்புத்தசை பகுதிகள் உட்படுத்தப்படுவது, அதிகப்படியான உடல்பருமன், தொடர் இருமல் மற்றும் தொடர் மலச்சிக்கல் ஆகியவையும் கருப்பை இறக்கத்திற்கான கூடுதல் காரணங்களாக அமைகின்றன.
கருப்பை இறக்க நிலைகளுக்கு ஏற்ப மருத்துவச் சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. அதிகப்படியான பாதிப்பு உள்ளவர்களுக்கு அறுவைச்சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையுடன் கீழ்கண்ட அறிவுரையும் வழங்கப்படுகிறது.
உடல் எடை குறைப்பு.
இடுப்புப்பகுதி மற்றும் வயிற்றுப்பகுதித் தசைகளுக்கு அதிக வேலைப்பளு தவிர்ப்பு.
ஈஸ்ரோஜென் குறைபாடு நீக்கம்.
எடை அதிகமாக உள்ள பொருட்களைக் கையாளுவதைத் தவிர்த்தல்.
கருப்பை இறங்காமல் இருக்க வளையம் (Pessary) பொருத்துதல்.
இடுப்புத்தசைகள், அடிவயிற்று தசைகள் வலுப்பெற உடலியக்கப் பயிற்சிகள்.
கருப்பை இறக்கத்திற்கான இயன்முறை மருத்துவம்
நோக்கம்
உடல் பருமன் குறைப்பு
முதுகு மற்றும் இடுப்பு வலி குறைப்பு
இடுப்புப்பகுதி, அடிவயிற்றுப்பகுதி தசைகளை வலுப்படுத்துதல்.
சிறுநீரைக் கட்டுப்படுத்த பயிற்சிகள் அளிப்பது.
வலி குறைப்பிற்கு வெப்பசிகிச்சைகள் (Heat Therapy) மற்றும் மின்சிகிச்சைகள் (Electro Therapy) அளிக்கப்படுகின்றது.
இடுப்பு மற்றும் அடிவயிற்றுத்தசைகளை வலுப்படுத்த நோயாளிகள் தாங்களாகவே மேற்கொள்ளும் உடலியக்கப் பயிற்சிகள் இயன்முறை மருத்துவரால் பரிந்துரைக்கப்படுகிறது.
Post a Comment