- புளி - எலுமிச்சை அளவு
- உப்பு - தேவைக்கேற்ப
- காய்ந்த மிளகாய் - 4
- கறிவேப்பிலை - சில இதழ்கள்
- சின்ன வெங்காயம் - 4
- தக்காளி - 1
- சீரகம் - அரை தேக்கரண்டி
செய்முறை
தக்காளி, சின்ன வெங்காயம், கறிவேப்பிலையைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
உப்பு + புளியை 2 டம்ளர் நீரில் கரைத்து வடிகட்டு எடுத்துக் கொள்ளவும்.
அதில் காய்ந்த மிளகாயை இரண்டாகக் கிள்ளிப்போட்டு, அதையும் கரைத்து தோலை எடுத்துவிடவும்.
பின் அதில் நறுக்கிய சின்ன வெங்காயம், தக்காளியைப் போட்டு கசக்கிவிட்டு கறிவேப்பிலை தூவி, சீரகத்தையும் தேய்த்துப் போட்டு கலக்கி பரிமாறவும்.
செட்டிநாட்டின் மிக எளிமையான சைட் டிஷ் இது.
இரண்டே நிமிஷத்தில் தயாரிக்கலாம். தோசை, இட்லிக்கு தொட்டுக்கொள்ள உப்பு, உறைப்பாக நன்றாக இருக்கும்.
சுவையான உப்புப் புளி குழம்பு ரெடி

Post a Comment