பாசிப்பருப்பு மசியல்

தேவையானவை
  • பாசிப்பருப்பு – அரை கப், 
  • நறுக்கிய தக்காளி – கால் கப், 
  • பச்சை மிளகாய் – 3, 
  • காய்ந்த மிளகாய் – 2, 
  • புளி – 50 கிராம், 
  • மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை, 
  • பெருங்காயத்தூள், கடுகு – தலா கால் டீஸ்பூன், 
  • நறுக்கிய கொத்தமல்லி, கறிவேப்பிலை – சிறிதளவு, 
  • உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.
செய்முறை
குக்கரில் பாசிப்பருப்பு, மஞ்சள்தூள் சேர்த்து குழைய வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, கிள்ளிய காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள் தாளிக்கவும். பிறகு, நறுக்கிய தக்காளி, பச்சை மிளகாய் போட்டு வதக்கி… புளிக் கரைசல், உப்பு சேர்த்து கலக்கவும். 

அது கொதித்ததும், வேக வைத்து மசித்த பாசிப்பருப்பைப் போட்டு மீண்டும் ஒருமுறை கொதிக்க விடவும். பிறகு, நறுக்கிய கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்த்துப் பரிமாறவும்.

0 Comments

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post