- உளுந்து அப்பளத் துண்டுகள் – கால் கப்,
- புளி – 50 கிராம்,
- கடுகு – கால் டீஸ்பூன்,
- வெந்தயம் – அரை டீஸ்பூன்,
- துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு – தலா ஒரு டீஸ்பூன்,
- காய்ந்த மிளகாய் – 6,
- மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் – தலா கால் டீஸ்பூன்,
- மிளகாய்த்தூள் – அரை டீஸ்பூன்,
- கறிவேப்பிலை – சிறிதளவு,
- பொடித்த வெல்லம் – ஒரு டீஸ்பூன்,
- எண்ணெய், உப்பு – தேவையான அளவு.
செய்முறை
கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, வெந்தயம், பருப்பு வகைகள், பெருங்காயத்தூள், கிள்ளிய காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை தாளிக்கவும். பிறகு வடிகட்டிய புளிக் கரைசலை விட்டு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், உப்பு சேர்க்கவும்.
கொதிக்க ஆரம்பித்தவுடன், அப்பளத் துண்டுகளைப் போட்டு மீண்டும் நன்றாக கொதிக்க விட்டு, பொடித்த வெல்லம் சேர்த்து இறக்க… அப்பளக் குழம்பு தயார்.
Post a Comment