- துவரம்பருப்பு – 100 கிராம்,
- கத்திரிக்காய் – 2,
- முருங்கைக்காய் – பாதி அளவு,
- சிறிய மாங்காய் – 1 (சீவிக் கொள்ளவும்),
- சின்ன வெங்காயம் – 10,
- புளி – கொட்டைப்பாக்கு அளவு,
- சாம்பார் பொடி – 2 டீஸ்பூன்,
- மஞ்சள்தூள் – முக்கால் டீஸ்பூன்,
- பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை,
- நறுக்கிய கொத்தமல்லி,
- தேங்காய் துருவல் – சிறிதளவு,
- எண்ணெய், உப்பு – தேவையான அளவு.
வறுத்து அரைக்க
- வெந்தயம், உளுத்தம்பருப்பு, சீரகம், தனியா – தலா ஒரு டீஸ்பூன்,
- காய்ந்த மிளகாய் – 2 (சிறிது எண்ணெயில் வறுத்து அரைக்கவும்).
தாளிக்க
- கடுகு, உளுத்தம்பருப்பு – தலா ஒரு டீஸ்பூன்,
- கறிவேப்பிலை, வெந்தயம் – சிறிதளவு.
செய்முறை
துவரம்பருப்பு, மஞ்சள்தூள், பெருங்காயத்தூள், உப்பு ஆகியவற்றை சேர்த்து வேகவிடவும். தனியாக ஒரு பாத்திரத்தில் காய்கறிகளை வேகவிட்டு, பாதி வெந்ததும் வெங்காயம், மாங்காய், சாம்பார் பொடி, புளிக் கரைசல் சேர்த்துக் கொதிக்க விட்டு, வெந்த பருப்பை சேர்த்துக் கலந்து கொதிக்கவிடவும். வறுத்து அரைத்த பொடியை சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கவும். தாளிக்கக் கொடுத்துள்ளவற்றை சிறிது எண்ணெயில் தாளித்துச் சேர்க்கவும். நறுக்கிய கொத்தமல்லி, தேங்காய் துருவல் தூவி இறக்கவும்.
கமகமவென மணக்கும் இந்த ஸ்பெஷல் சாம்பார். அந்த காலத்தில் உரலில் இடித்துப் பொடித்ததால், ‘இடி சாம்பார்’ என்று பெயர் வந்தது. இதை ‘மாப்பிள்ளை சாம்பார்’ என்றும் கூறுவர்

Post a Comment