- மேரி பிஸ்கெட் - 5,
- நறுக்கிய ஃப்ரெஷ் ஸ்ட்ராபெர்ரி - 1/3 கப்,
- ஃப்ரெஷ் க்ரீம் - 1/2 கப்,
- உருக்கிய வெண்ணெய் - 3 டீஸ்பூன்
- கெட்டித் தயிர் - 3/4 கப்
- சர்க்கரை - 3 டேபிள்ஸ்பூன்
- சைனா கிராஸ் - 1 கிராம்,
- தண்ணீர் - 1/4 கப்.
குறிப்பு
உங்களுக்கு பிடித்தமான கேக் செய்ய முதலில் எப்போதும் மாவு தண்ணீர் மற்றும் சர்க்கரை அளவு சரியாக இருக்க வேண்டும்.பிறகு கேக் தேவையான பொருட்கள் கொண்ட உங்கள் பிடித்தமான கேக் வகைகள் செய்து சுவைக்கலாம்.
செய்முறை
முதலில் தயிரை ஒரு மெல்லிய துணியில் கட்டி 1 மணி நேரம் வடிகட்டி 1/2 கப் தயிராக மாற்றவும். பிஸ்கெட்களை கொர கொரப்பாக அரைத்துக் கொள்ளவும்
உருக்கிய வெண்ணெயில் பிஸ்கெட்டை சேர்த்துக் கலக்கவும். இந்தக் கலவை சிறிது ஈரப்பதமாக இருக்கும். இதை ஒரு டம்ளரின் அடி பாகத்தில் போட்டு ஸ்பூனால் நன்கு அழுத்தவும். எனவே இது சமமாக மாறும். இது முதல் லேயர். இதை குளிர்சாதனப் பெட்டியில்மற்ற லேயர் ரெடியாகும் வரைவைத்திருக்கவும்
ஸ்ட்ராபெர்ரி பழங்களை வெட்டி சர்க்கரையுடன் கலந்து வைத்துக் கொள்ளவும். இந்தக் கலவையை ஒரு பாத்திரத்தில் லேசாக சுட வைத்து இறக்கி வைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் வடிகட்டிய தயிர், க்ரீம் இரண்டையும் கலக்கவும். இத்துடன் ஸ்ட்ராபெர்ரி துண்டுகளை கலந்து கொள்ளவும். ஒரு கடாயில் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து, சைனா கிராஸ் கலந்து கொள்ளவும். சைனா கிராஸ் முழுவதும் தண்ணீருடன் கலந்து திரவ நிலையை அடையும் வரை கொதிக்க விடவும்.
இந்தக் கலவையை வடி கட்டிய தயிர், க்ரீம் கலவையில் சேர்க்கவும். வேகமாகக் கலக்கவும். டம்ளரில் இதை இரண்டாவது லேயர் ஆக சேர்க்கவும்.
இதை 5 மணி நேரம் அல்லது இரவு முழுவதும் குளிர வைக்கவும். இதற்கு பிறகு ஸ்ட்ராபெர்ரி துண்டுகளை மேலே சேர்க்கவும். சுவையான ஸ்ட்ராபெர்ரி -சீஸ் கேக் தயார்.
Post a Comment