வெந்தயக் குழம்பு

தேவையானவை
  • துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, 
  • உளுத்தம்பருப்பு – தலா ஒரு டீஸ்பூன், 
  • கடுகு – கால் டீஸ்பூன், 
  • வெந்தயம் – அரை டீஸ்பூன், 
  • காய்ந்த மிளகாய் – 8, 
  • மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை, 
  • கறிவேப்பிலை – சிறிதளவு, 
  • பெருங்காயம் – சிறு துண்டு, 
  • பொடித்த வெல்லம் – ஒரு டீஸ்பூன், 
  • புளி – 50 கிராம், 
  • அரிசி மாவு – 2 டீஸ்பூன். 
  • உப்பு, நல்லெண்ணெய் – தேவையான அளவு.
செய்முறை
கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, வெந்தயம், பெருங்காயம், காய்ந்த மிளகாய், கொடுக்கப்பட்டுள்ள மூன்று வகை பருப்புகள், கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும். புளியைத் தண்ணீரில் ஊற வைத்து நன்கு கரைத்து, வடிகட்டி தாளிப்பில் சேர்க்கவும். 

மஞ்சள்தூள், பொடித்த வெல்லம், உப்பு போட்டு நன்றாகக் கொதிக்க விடவும். அரிசி மாவை சிறிதளவு தண்ணீரில் கரைத்து, அதில் சேர்த்து மீண்டும் சிறிது நேரம் கொதிக்க விட்டு இறக்கவும்.

0 Comments

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post