பொரிச்ச குழம்பு

தேவையானவை
  • பாசிப்பருப்பு – அரை கப், 
  • பெருங்காயத்தூள், கடுகு – தலா கால் டீஸ்பூன், 
  • கறிவேப்பிலை – சிறிதளவு, 
  • மஞ்சள் தூள் – ஒரு சிட்டிகை, 
  • எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

வறுத்து அரைக்க
  • உளுத்தம்பருப்பு, மிளகு – தலா ஒரு டீஸ்பூன், 
  • காய்ந்த மிளகாய் – 2, 
  • தேங்காய் துருவல் – ஒரு டீஸ்பூன்.

செய்முறை
குக்கரில் பாசிப்பருப்பு, மஞ்சள் தூள் சேர்த்து குழைய வேக விடவும். கடாயில் சிறிதளவு எண்ணெய் விட்டு, வறுக்கக் கொடுத்துள்ள பொருட்களை போட்டு வறுத்து… ஆற வைத்து, மிக்ஸியில் அரைக்கவும். 

வேக வைத்த பருப்புடன் அரைத்த கலவை, உப்பு சேர்த்துக் கொதிக்க விட்டு இறக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை தாளித்துக் கொட்டி பரிமாறவும்.

0 Comments

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post