மாந்தோல் குழம்பு

தேவையானவை
  • மாங்காய்த் தோல் (உப்பு போட்டு ஊற வைத்து, 
  • வெயிலில் காய வைத்து எடுத்தது) – கால் கப், 
  • புளி – சிறிதளவு, 
  • உளுத்தம்பருப்பு – ஒரு டீஸ்பூன், 
  • மிளகு – ஒரு டீஸ்பூன், 
  • காய்ந்த மிளகாய் – 6, 
  • தேங்காய் துருவல் – 2 டீஸ்பூன், 
  • பொடித்த வெல்லம் – ஒரு டீஸ்பூன், 
  • கடுகு, பெருங்காயத்தூள் – தலா கால் டீஸ்பூன். 
  • கறிவேப்பிலை – சிறிதளவு, 
  • உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.
செய்முறை
கொதிக்கும் நீரில் மாங்காய்த் தோலை போட்டு அரை மணி நேரம் ஊற விடவும். கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்த மிளகாய், உளுத்தம்பருப்பு, மிளகு போட்டு வறுத்து… அதனுடன் தேங்காய் துருவல் சேர்த்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். 

புளியை ஊற வைத்துக் கரைத்து வடிகட்டி, அதில் உப்பு, பெருங்காயத்தூள் போட்டுக் கொதிக்க விடவும். 

பிறகு, ஊற வைத்த மாங்காய்த் தோல், பொடித்த வெல்லம் சேர்த்து 10 நிமிடம் கொதிக்க விடவும். பிறகு, அரைத்த கலவையைச் சேர்த்து சிறிது நேரம் கொதிக்க விட்டு இறக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, கறிவேப்பிலைத் தாளித்து சேர்த்துப் பரிமாறவும்.

0 Comments

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post