- சின்ன வெங்காயம் – ஒரு கப்,
- கடுகு – கால் டீஸ்பூன்,
- வெந்தயம் – அரை டீஸ்பூன்,
- காய்ந்த மிளகாய் – 2,
- புளி – 50 கிராம்,
- சாம்பார் பொடி – 2 டீஸ்பூன்,
- பொடித்த வெல்லம் – ஒரு டீஸ்பூன்,
- கறிவேப்பிலை – சிறிதளவு,
- உப்பு, நல்லெண்ணெய் – தேவையான அளவு.
செய்முறை
கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, வெந்தயம், காய்ந்த மிளகாய் தாளித்து… தோல் உரித்த சின்ன வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும். வாசனை வந்ததும் சாம்பார் பொடி, உப்பு சேர்த்துக் கலக்கவும்.
பிறகு, வடிகட்டிய புளிக் கரைசல் விட்டுக் கொதிக்க வைக்கவும். எண்ணெய் பிரிந்து வரும் சமயத்தில், பொடித்த வெல்லம் போட்டுக் கலந்து, கெட்டியான பதம் வந்ததும் இறக்கவும். இந்தக் குழம்பு இரண்டு நாட்கள் வரை கூட நன்றாக இருக்கும்.
Post a Comment