- காரட் - 2
- பீன்ஸ் - 8
- குடை மிளகாய் - 2
- துருவிய முட்டை கோஸ் - 1கப்
- பெரிய வெங்காயம் - 4
- வெங்காயத்தாள் - 1 கட்டு
- தக்காளி சாஸ் - 2 டீஸ்பூன்
- சில்லி சாஸ் - 2 டீஸ்பூன்
- சோயா சாஸ் - 1 டேபிள் ஸ்பூன்
- மிளகுத்தூள் - 1 டீஸ்பூன்
- கார்ன் பிளார் மாவு - 8 டேபிள் ஸ்பூன்
- உப்பு - தேவையான அளவு
- எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை
வெஜிடபிள் மஞ்சூரியன் செய்வதற்கு முதலில் காரட், பீன்ஸ், குடை மிளகாய், துருவிய முட்டை கோஸ், பெரிய வெங்காயம் ஆகியவற்றை பொடிப்பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
பிறகு வாணலியில் ஒரு எண்ணெயை ஊற்றி, பாதி வெங்காயம், காய்களை போட்டு, கொஞ்சம் உப்பு, சேர்த்து நன்கு வதக்கவும். நன்கு வதங்கியதும், இறக்கி ஆறவைத்து, அதனுடன் கார்ன் பிளார் மாவு சேர்த்து காய்களை பிசைந்து கொள்ளவும்.
பிறகு ஒரு தட்டில் லேசாக எண்ணெயை தடவி, பிசைந்த கலவையை சமமாக தட்டி, சிறு சதுரங்களாக வெட்டி எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.
பிறகு வாணலியில் எண்ணெயை ஊற்றி, அதில் மீதியுள்ள வெங்காயம், இஞ்சி, பூண்டு விழுது, நறுக்கிய வெங்காயத்தாள் ஆகியவற்றை சேர்த்து வதக்கி, எல்லா சாஸ், மிளகுத்தூள், மீதியுள்ள அஜினமோட்டோ, உப்பு ஆகியவற்றை சேர்த்து வதக்கவும். பிறகு அதில் மீதியுள்ள கார்ன் பிளார் மாவை கரைத்து ஊற்றவும்.
கொதித்தபின் பொரித்த சதுரங்களை கிரேவியில் சேர்க்கவும். கிரேவி கொதித்து திக்காக ஆனதும் இறக்கவும். சுவையான வெஜிடபிள் மஞ்சூரியன் ரெடி.
Post a Comment