கடலைக் குழம்பு

தேவையானவை
  • வெள்ளை கொண்டைக்கடலை – அரை கப், 
  • துவரம்பருப்பு – அரை கப், 
  • புளி – 50 கிராம், 
  • சாம்பார் பொடி – 2 டீஸ்பூன், 
  • கடுகு – அரை டீஸ்பூன், 
  • வெந்தயம், மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் – தலா கால் டீஸ்பூன், 
  • நறுக்கிய கொத்தமல்லி, கறிவேப்பிலை – சிறிதளவு, 
  • எண்ணெய், உப்பு – தேவையான அளவு.
செய்முறை
முதல் நாள் இரவே வெள்ளை கொண்டைக்கடலையை ஊற வைக்கவும். குக்கரில் துவரம்பருப்புடன் மஞ்சள்தூள் சேர்த்து வேக வைக்கவும். வெள்ளை கொண்டைக்கடலையை தனியாக வேக வைக்கவும். புளியை ஊற வைத்துக் கரைத்து, உப்பு, சாம்பார் பொடி சேர்த்து கலந்து மிதமான தீயில் வைத்துக் கொதிக்க விடவும். 

பிறகு, வேக வைத்த வெள்ளைக் கொண்டக்கடலை, பெருங்காயத்தூள் போட்டு 5 நிமிடம் கொதிக்க விடவும். மசித்த துவரம்பருப்பை போட்டுக் கொதிக்க விட்டு… எண்ணெயில் கடுகு, வெந்தயம் தாளித்துக் கொட்டவும். இறக்குவதற்கு முன் நறுக்கிய கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்க்கவும்.

0 Comments

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post