- மணத்தக்காளி வற்றல் – அரை கப்,
- புளி – 50 கிராம்,
- கடுகு, பெருங்காயத்தூள் – தலா கால் டீஸ்பூன்,
- வெந்தயம் – ஒரு டீஸ்பூன்,
- பொடித்த வெல்லம் – ஒரு டீஸ்பூன்,
- கறிவேப்பிலை – சிறிதளவு,
- மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்,
- காய்ந்த மிளகாய் – 3,
- சாம்பார் பொடி – ஒரு டீஸ்பூன்,
- எண்ணெய், உப்பு – தேவையான அளவு.
செய்முறை
கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, வெந்தயம், காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள் தாளிக்கவும். மணத்தக்காளி வற்றலை போட்டு, நன்றாகப் பொரிந்ததும்… சாம்பார் பொடி, மஞ்சள்தூள் சேர்த்து நன்கு கலக்கவும்.
பிறகு, புளிக் கரைசலை விட்டு, பொடித்த வெல்லம், உப்பு போட்டு நன்றாகக் கொதிக்க விடவும். எண்ணெய் பிரிந்து வந்ததும், கறிவேப்பிலையைப் போட்டு இறக்கவும்.
குழம்பு தண்ணியாக இருந்தால், சிறிதளவு அரிசி மாவையோ அல்லது கடலை மாவையோ கரைத்து விட்டுக் கொதிக்க விடவும்.
Post a Comment