- நறுக்கிய வாழைப்பூ - ஒரு கப்
- பயத்தம் பருப்பு - கால் கப்
- தேங்காய் துருவல் - அரை கப்
- காய்ந்த மிளகாய் - 2
- கடுகு - கால் டீஸ்பூன்
- உளுத்தம் பருப்பு - அரை டீஸ்பூன்
- கடலை பருப்பு - அரை டீஸ்பூன்
- எண்ணெய் - தேவைக்கேற்ப
- பெருங்காயத் தூள் - ஒரு சிட்டிகை
- மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
- கறிவேப்பிலை - ஒரு கொத்து
- உப்பு - தேவைக்கேற்ப
செய்முறை
வாழைப்பூவை சுத்தம் செய்து அதில் உள்ள நரம்பை நீக்கி வைக்கவும். மற்ற தேவையான பொருட்களை தயாராக எடுத்துக் கொள்ளவும்.
வாழைப்பூவுடன் மஞ்சள் தூள், உப்பு, பயத்தம் பருப்பு சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, பெருங்காயத் தூள் சேர்த்து தாளிக்கவும்.
அதில் வேக வைத்துள்ள வாழைப்பூ, பருப்பு கலவையை தண்ணீர் வடித்து சேர்த்து கிளறவும். கடைசியில் தேங்காய் துருவல் மற்றும் சிறிது உப்பு சேர்த்து நன்கு கிளறி இறக்கவும். சுவையான வாழைப்பூ பொரியல் தயார்.

Post a Comment