துவரம்பருப்பு மசியல்

தேவையானவை
  • துவரம்பருப்பு – அரை கப், 
  • வெந்தயம் – ஒரு டேபிள்ஸ்பூன், 
  • மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன், 
  • தக்காளி – 2, 
  • பச்சை மிளகாய் – 3, 
  • புளி – 50 கிராம், 
  • காய்ந்த மிளகாய் – 2, 
  • கடுகு, பெருங்காயத்தூள் – தலா கால் டீஸ்பூன், 
  • நறுக்கிய கொத்தமல்லி, கறிவேப்பிலை – சிறிதளவு, 
  • எண்ணெய், உப்பு – தேவையான அளவு.
செய்முறை
குக்கரில் துவரம்பருப்பு, வெந்தயம், மஞ்சள்தூள் சேர்த்துக் குழைய வேக விடவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, பெருங்காயத்தூள், கிள்ளிய காய்ந்த மிளகாய் தாளிக்கவும். பிறகு, நறுக்கிய தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும். 

புளியை ஊற வைத்து கரைத்து வடிகட்டி, அதனை தாளிப்பில் சேர்க்கவும். அது நன்கு கொதிக்க ஆரம்பித்ததும், வேக வைத்து மசித்த துவரம்பருப்புக் கலவை, உப்பு சேர்த்துக் கொதிக்க விடவும். வாசனை வந்ததும் நறுக்கிய கொத்தமல்லி, கறிவேப்பிலை போட்டு இறக்கவும்.

0 Comments

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post