வரகு அரிசி சப்பாத்தி

தேவையான பொருட்கள் 
  • வரகு அரிசி - 1 கப்
  • உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை
வரகு அரிசியை மாவாக அரைத்து கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்க ஆரம்பித்தவுடன் சிறிது உப்பு சேர்த்து இறக்கவும்.

ஒரு பாத்திரத்தில் அரைத்த வரகு மாவை போட்டு அதில் கொதிக்கும் தண்ணீரை தேவையான அளவு ஊற்றி கரண்டியால் நன்றாக கிளறவும்.

சற்று சூடு ஆறியதும் கைகளில் எண்ணெய் தேய்த்து கொண்டு மாவை கையால் நன்றாக பிசைந்து கொள்ளவும். மாவை சப்பாத்தி மாவு போல் நன்றாக பிசைந்து கொள்ள வேண்டும்.

பிசைத்த மாவை சப்பாத்திகளாக தேய்த்து வைக்கவும்.

தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் தேய்த்து வைத்த சப்பாத்தியை போட்டு வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுக்கவும். 

இந்த சப்பாத்திக்கு எண்ணெய் தேவையில்லை. 

சூப்பரான சத்தான வரகு அரிசி சப்பாத்தி ரெடி.

0 Comments

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post