- உளுந்து - அரை ஆழாக்கு
- அரிசி மாவு - 1 ஆழாக்கு
- மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்
- பெருஞ்சீரகம் - 1 டேபிள்ஸ்பூன்
- உப்பு - தேவையான அளவு
- கறிவேப்பிலை - பொடியாக நறுக்கியது
- எண்ணெய் - பொரிக்க
செய்முறை
உளுந்தை இரண்டு மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும். பிறகு தண்ணீரை வடித்து மிக்ஸியில் இட்டு மற்ற அனைத்துப் பொருட்களையும் சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும். இதை ஒரு பவுலில் இட்டு மூன்று டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு நன்றாகக் குழைக்கவும். இதை, சிறிய உருண்டைகளாக உருட்டி வட்டமாகத் தட்டி கடாயில் காய்ந்த எண்ணெயில் போட்டு பொன்னிறமாகப் பொரித்து எடுத்தால், பருத்தித்துறை வடை ரெடி

Post a Comment