- பாசிப்பருப்பு – 100 கிராம்,
- தக்காளி – 2,
- கீறிய பச்சை மிளகாய் – 6,
- சின்ன வெங்காயம் – 20,
- இஞ்சி – சிறிய துண்டு,
- கொத்தமல்லி – அரை கட்டு,
- மஞ்சள்தூள் – முக்கால் டீஸ்பூன்,
- பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை,
- எண்ணெய், உப்பு – தேவையான அளவு.
தாளிக்க
- கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம் – தலா ஒரு டீஸ்பூன்,
- கறிவேப்பிலை – சிறிதளவு.
செய்முறை
பாசிப்பருப்பை மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் சேர்த்து வேகவிடவும். கொத்தமல்லி, தக்காளியைப் பொடியாக நறுக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் தாளிக்கக் கொடுத்துள்ளவற்றை தாளித்து… சின்ன வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், நறுக்கிய இஞ்சி சேர்த்து வதக்கவும். நன்றாக வதங்கியதும் வேக வைத்த பாசிப்பருப்பு, உப்பு சேர்த்துக் கலக்கி, கொத்தமல்லி சேர்த்துக் கொதிக்க விட்டு இறக்கவும்.
இட்லி, தோசைக்கு ஏற்ற சாம்பார் இது.
Post a Comment