மிளகு வடை

தேவையான பொருட்கள்
  • உளுந்து - 5 கப் 
  • மிளகு - 5 டேபிள்ஸ்பூன்
  • சீரகம் - 4 டீஸ்பூன் 
  • உப்பு - தேவையான அளவு 
  • எண்ணெய் - தேவையான அளவு
  • பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை

செய்முறை
மிளகு வடை செய்வதற்கு முதலில் ஒரு பாத்திரத்தில் உளுந்தைப் போட்டு அரை மணி நேரம் ஊற வைத்துக்கொள்ளவும்.

பிறகு உளுந்து ஊறியதும், அதில் உள்ள தண்ணீரை வடிகட்டிவிட்டு கிரைண்டரில் போட்டு, சிறிதளவு தண்ணீர் தெளித்து மாவை கெட்டியாக அரைத்து எடுத்துக்கொள்ளவும். 

அடுத்து மிளகு மற்றும் சீரகத்தை மிக்ஸியில் போட்டு பொடித்து வைத்துக்கொள்ளவும். பின்பு அரைத்து வைத்துள்ள உளுந்து மாவுடன் பொடித்து வைத்துள்ள மிளகு, சீரகம், பெருங்காயத்தூள், தேவையான அளவு உப்பு ஆகியவற்றை சேர்த்து கெட்டியாக கலந்து வைத்துக்கொள்ளவும்.

பின்பு கெட்டியான மாவை சிறுசிறு உருண்டைகளாக எடுத்து, ஈரத்துணியில் மெல்லிய வடைகளாகத் தட்டி நடுவில் ஓட்டை போடவும்.

அடுத்து ஒரு வாணலியில் எண்ணெயை ஊற்றி சூ டானதும், அதில் தட்டி வைத்துள்ள வடைகளைப் போட்டு பொரித்து எடுத்தால் டேஸ்ட்டான மிளகு வடை ரெடி.

0 Comments

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post