மஷ்ரூம் பக்கோடா

தேவையான பொருட்கள்
  • கடலை மாவு - 2 கப்
  • அரிசி மாவு  - 4 ஸ்பூன்
  • நறுக்கிய மஷ்ரூம் - 4 கப்
  • பொடியாக நறுக்கிய வெங்காயம் - 2 கப்
  • பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி  - 2 டீஸ்பூன்
  • எண்ணெய் - தேவையான அளவு 
  • உப்பு - தேவையான அளவு 
செய்முறை 
மஷ்ரூம் பக்கோடா செய்வதற்கு முதலில் கடலை மாவு, அரிசி மாவு, மஷ்ரூம், வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய், உப்பு, எண்ணெயுடன் சிறிதளவு தண்ணீரை தெளித்து கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும்.

பிறகு ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும், மஷ்ரூம் கலவையை உதிர்த்துப் போட்டு, பொன்னிறமாக வேக வைத்து எடுக்கவும். 

0 Comments

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post