பெங்களூர் மசால் தோசை

தேவையான பொருட்கள்
  • புழுங்கலரிசி - 4 கப் 
  • பச்சரிசி - 2 கப் 
  • உளுந்து - 2 கப் 
  • கடலைப்பருப்பு - 2 ஸ்பூன்
  • ஆப்பச்சோடா - 2 சிட்டிகை
  • உப்புத்தூள் - தேவையான அளவு 
  • எண்ணெய் - தேவையான அளவு
  • உருளைக்கிழங்கு மசாலா - தேவையான அளவு
  • கார சட்னி - தேவையான அளவு 

செய்முறை
பெங்களூர் மசால் தோசை செய்வதற்கு முதலில் அரிசி மற்றும் பருப்பு வகைகள் அனைத்தையும் ஒன்றாக கலந்து நான்கு மணி நேரம் நன்கு ஊற வைக்கவும். 

நன்கு ஊறிய பிறகு அவற்றை மிக்ஸியில் போட்டு கரகரப்பான பதத்தில் எடுத்து, அதில் தேவையான அளவு உப்பைச் சேர்த்து இரவு முழுவதும் புளிக்க விடவும். 

பிறகு மாவில் ஆப்பச்சோடா மற்றும் சிறிது நீரைச் சேர்த்து கலக்கவும். 

பிறகு தோசைக் கல் சூடானதும், எண்ணெயைத் தடவி, அதில் ஒரு கரண்டி மாவை எடுத்து மெல்லியதாக வார்த்து சுற்றிலும் எண்ணெயை ஊற்றவும். 

பிறகு தோசை முழுவதும் வெந்ததும் திருப்பி போடாமல் எடுக்கவும். பிறகு தோசையின் மீது காரச் சட்னியை தடவி, நடுவில் உருளைக் கிழங்கு மசாலாவை வைத்து இரண்டு புறமும் மடித்து எடுக்கவும். சுவையான பெங்களூர் மசால் தோசை ரெடி.

0 Comments

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post