கொட்டு ரசம்

தேவையானபொருட்கள்
  • புளித் தண்ணீர் – 2 கப், 
  • ரசப்பொடி – 2 டீஸ்பூன், 
  • பெருங்காயத்தூள் – அரை டீஸ்பூன்,  
  • கடுகு, கொத்தமல்லி, கறிவேப்பிலை, எண்ணெய்,  உப்பு – தேவையான அளவு.

ரசப்பொடி செய்ய – தேவையானபொருட்கள்
  • தனியா – 300 கிராம், 
  • மிளகு – 100 கிராம், 
  • துவரம்பருப்பு – 100 கிராம், 
  • கடலைப்பருப்பு – 50 கிராம், 
  • சீரகம் – 25 கிராம், 
  • மஞ்சள்துண்டு – சிறியது, 
  • காய்ந்த மிளகாய் – 20-லிருந்து 30 அல்லது காரத்துக்கு ஏற்றப்படி 

கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை மெஷினிலோ அல்லது மிக்ஸியிலோ கரகரப்பாக அரைத்து வைத்துக் கொண்டு தேவைக்கு ஏற்ப பயன்படுத்தலாம்.

செய்முறை

புளித் தண்ணீரை கொதிக்கவிடவும். புளி வாசனை போனவுடன் உப்பு, ரசப்பொடி, பெருங்காயத்தூள் சேர்த்து ஒரு பொங்கு பொங்கியவுடன் கீழே இறக்கி… கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்க்கவும். எண்ணெயில் கடுகு தாளித்துச் சேர்க்கவும்.

0 Comments

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post