- மைதா மாவு - 200 கிராம்,
- பெரிய நெல்லிக்காய் - 10,
- வெல்லம் (பொடித்தது) - 200 கிராம்,
- கடலைப்பருப்பு - 100 கிராம்,
- தேங்காய் துருவல் - ஒரு கப்,
- ஏலக்காய்த்தூள், கேசரி பவுடர் - சிறிதளவு,
- நெய் - 100 மில்லி.
செய்முறை
மைதா மாவுடன் கேசரி பவுடர் சேர்த்து, சிறிதளவு தண்ணீர் விட்டு கெட்டியாக பிசைந்து கொள்ளவும். தண்ணீரைக் கொதிக்க வைத்து, நெல்லிக்காயைப் போட்டு, ஆறிய உடன் எடுத்து உதிர்த்து, கொட்டை நீக்கி வைத்துக் கொள்ளவும். கடலைப்பருப்பை பொன்னிறமாக வறுத்து அரை மணி நேரம் ஊற வைத்து, வேக வைத்து, தண்ணீரை வடிக்கவும்... தேங்காய் துருவல், வறுத்த கடலைப்பருப்பு, வேக வைத்த நெல்லிக்காய், வெல்லம் சேர்த்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.
வாணலியில் 2 டீஸ்பூன் நெய் விட்டு, அரைத்த விழுதைப் போட்டு கெட்டியாக கிளறி, ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கலந்து சிறுசிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். பிசைந்த மைதா மாவை சிறிய உருண்டையாக உருட்டி, சப்பாத்தி வடிவத்தில் சிறியதாக இட்டு, உள்ளே பூரண உருண்டையை வைத்து மூடி, ஒரு பிளாஸ்டிக் பேப்பரில் சிறிது நெய் தடவி, கைகளால் போளியாக தட்டவும்.
தோசைக் கல்லை அடுப்பில் வைத்து, மிதமான தீயில் ஒவ்வொரு போளியாக போட்டு, சிறிது நெய்விட்டு, இருபுறமும் திருப்பி வேகவிட்டு எடுக்கவும். குறிப்பு: பூரணத்தை முதல் நாளே தயாரித்து வைத்தால், போளி தயாரிப்பது மிகவும் சுலபம்
Post a Comment