டயட் சாம்பார்

தேவையானவை
  • துவரம்பருப்பு – அரை கப், 
  • ஏதேனும் ஒரு வகை காய் (நறுக்கியது) – ஒரு கப், 
  • நறுக்கிய வெங்காயம் – 1, 
  • தக்காளி – 2, 
  • சாம்பார் பொடி – 2 டீஸ்பூன், 
  • புளி – 50 கிராம், 
  • மஞ்சள்தூள், பெருங்காயத்தூள், கடுகு, வெந்தயம், சீரகம் – தலா கால் டீஸ்பூன், 
  • உளுத்தம்பருப்பு – அரை டீஸ்பூன், 
  • கறிவேப்பிலை, கொத்தமல்லி – சிறிதளவு, 
  • உப்பு – தேவையான அளவு.

செய்முறை
குக்கரில் துவரம்பருப்பு, மஞ்சள்தூள், தண்ணீர் சேர்த்து வேகவிட்டு, 3 விசில் வந்ததும் இறக்கவும். புளியை ஒரு கப் தண்ணீரில் ஊற வைத்து, கரைத்து, வடிகட்டவும். வெந்த பருப்புடன் நறுக்கிய காய், வெங்காயம், தக்காளி, சாம்பார் பொடி, புளிக் கரைசல், பெருங்காயத்தூள், உப்பு ஆகியவற்றை சேர்த்து, குக்கரை மூடி… 2 விசில் வந்ததும் இறக்கவும்.

வெறும் கடாயில் கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம், வெந்தயம் சேர்த்து மிதமான தீயில் நன்கு பொரிய விட்டு, சாம்பாரில் சேர்க்கவும். நறுக்கிய கொத்தமல்லி, கறிவேப்பிலை தூவி இறக்கினால்… டயட் சாம்பார் ரெடி

0 Comments

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post